காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-10 00:45 GMT

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்துக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...

நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சட்டம் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்...

மக்களவையில் வருகிற 14ம் தேதி உரையாற்றுவார் என தகவல்...


திருச்சி பஜார் தெருவில் சாக்குப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலத்தால் பரபரப்பு...

போலீசார் விசாரணை... உறவினர்கள் கண்ணீர்...


மும்பையில் உள்ள குர்லா பகுதியில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி பயங்கர விபத்து...

மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்...


அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை...

உக்ரைனுக்கு எதிரான போர் விவகாரத்தில் ரஷ்யா திட்டவட்ட மறுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்