மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-04 11:07 GMT

17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்...

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு மதிமுக கண்டனம்....

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 88 புதிய தாழ்தள பேருந்து சேவை...

"வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது"

உதகை அருகே சாலை சீரமைப்பு பணிக்காக 3 மாதங்களுக்கு மேல் மூடபட்டிருந்த பைக்காரா படகு இல்லம் திறப்பு...

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 88 புதிய தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். நீல நிற பேருந்துகளில், தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு பிரத்யேக படிகள், சிசிடிவி, சார்ஜிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிராட்வே, கிளாம்பாக்கம், கோயம்பேடு, பூந்தமல்லி, திருவொற்றியூர், தியாகராய நகர உட்பட பல்வேறு வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளனர். பல்லவன் இல்லத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்