விழுப்புரம் அருகே மாயமான இளைஞர் ஒருவர் வாலிபால் நெட் கம்பத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் தணிகைவேல். 20 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தணிகைவேல், திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
இதனிடையே கிராமத்தில் உள்ள மைதானத்தில் வாலிபால் நெட் கட்ட பயன்படும் கம்பத்தில் இளைஞர் சட்டையால் தூக்கிட்டு தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்திருக்கும் உறவினர்கள் உரிய நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பானது.
இந்நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.