சிறுவனை கிணற்றுக்குள் தொங்க விட்ட இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் காட்சிகள்
மத்திய பிரதேச மாநிலத்தில், செல்போனை திருடியதாக சிறுவன் கிணற்றுக்குள் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் அட்கோன் கிராமத்தில் யுவான் என்ற நபர், எட்டு வயது சிறுவனை கிணற்றுக்குள் தொங்கவிட்டு, திருடிய செல்போனை கொடுத்துவிடுமாறு மிரட்டியுள்ளார். அந்த சிறுவன், தான் செல்போனை எடுக்கவில்லை என கூறி அழுதுள்ளான். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து குழந்தையை மிரட்டிய யுவான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.