படிக்கும் பள்ளியில் மது குடித்த இளைஞர்கள்-காந்தியின் சிலையை உடைத்ததால் பரபரப்பு
திருவாரூரில் காந்தியின் சிலையை உடைத்த விவகாரத்தில் சகோதரர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல் அருகே வடகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காந்தியின் முழு உருவ சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில் தீபாவளியன்று இளைஞர்கள் 7 பேர் பள்ளியில் மது அருந்தியதாகவும், பின் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிலையை உடைத்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் சகோதரர்கள் உட்பட மூவரை கைது செய்த போலீசார் மீதமுள்ள இளைஞர்களை தேடி வருகின்றனர்