"புதுக்கோட்டையில் இருந்து உச்சநீதிமன்றத்தில் வாதாடலாம்" -சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா

Update: 2023-04-08 04:46 GMT

ஹைபிரிட் மோடு என்ற புதிய திட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் இங்கிருந்தபடியே வழக்குகளை நடத்தலாம் என்று, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றமும் பொன்னமராவதி மற்றும் கரம்பக்குடியில் மாவட்ட முனிசிப் மற்றும் குற்றவியல் மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் புதுக்கோட்டையில் இருந்து காணொளி காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் எஸ் எஸ் சுந்தர் ஆகியோர் பங்கேற்று நீதிமன்றங்களை திறந்து வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ராஜா, நீதித்துறையில் மூன்று வருட காலத்தில் புரட்சி மற்றும் சீர்திருத்தம் நடக்க உள்ளதாக கூறினார். காகிதம் இல்லாத நீதிமன்றங்களாக மாற்றப்பட உள்ளதாக கூறிய அவர், விரைவில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைபிரிட் மோடு என்ற புதிய திட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் இங்கிருந்தபடியே வழக்குகளை நடத்தலாம் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்