World Tour Finals பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை அகானே யமகுச்சி மகுடம் சூடினார்.
தாய்லாந்தில் நடைபெற்ற World Tour Finals பேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் டென்மார்க்கைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் விக்டர் அக்செல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தோனேசிய வீரர் ஆன்டனி சினிசுஹா உடன் அக்செல்சன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21க்கு 13, 21க்கு 14 என்ற செட் கணக்கில் அக்செல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.