" பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு
பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றுகள் மற்றும் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், அரசியல் தமக்கான துறை இல்லை என்று ஒதுங்கி நிற்பதாகவும் எனவே அதிக அளவில் அரசியலுக்கு பெண்கள் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.