"டிக்கெட் இல்லாமல் பயணித்த பெண்" - நடத்துனர் மீது பாய்ந்த நடவடிக்கை... போராட்டத்தில் குதித்த டிரைவர், கண்டக்டர்கள்...

Update: 2022-12-30 11:31 GMT

பொள்ளாச்சியில் பயணியிடம் பயணச்சீட்டு இல்லாததை தொடர்ந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக டிக்கெட் பரிசோதகர் கூறியதால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

காந்தி ஆசிரமம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தில் பயணசீட்டு தணிக்கையாளர் விஜயகுமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது பெண் பயணி ஒருவரிடம் இலவச பயண சீட்டு இல்லாதது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயகுமார் கூறியுள்ளார். இதனை அறிந்த மற்ற ஒட்டுனர்களும் நடத்துனர்களும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு நகர பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளும் போலீசாரும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்