தனியாக காட்டுக்குள் தொலைந்து போன பெண்.. 1 பாட்டில் Wine, லாலி பாப் மட்டுமே உணவு - 5 நாட்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்
காட்டில் காணாமல் போன பெண் ஒருவர் 5 நாட்களாக வெறும் வைன் மற்றும் லாலி பாப்-ஐ மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது...
48 வயதான லில்லியன் விக்டோரியா வனப்பகுதிக்கு 1 நாள் பயணமாக சென்றிருந்த போது வழிதவறி தொலைந்து போனார்... கார் சேற்றில் சிக்கிக் கொண்டது... செல்போன் சிக்னலும் துண்டிக்கப்பட்டது. உடல் நல பிரச்சினைகளால் அவரால் நடக்கமுடியவில்லை. அதிர்ஷ்டவசமாக அவரிடம் வைன் பாட்டில், மற்றும் சிறிது திண்பண்டங்கள் இருந்துள்ளன. அதை மட்டும் வைத்து 5 நாட்கள் சமாளித்துள்ளார்... 5 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு லில்லியன் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது...