அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து, அமலாக்கத்துறையினர், தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.