"சிறகுகள் நீட்டி பறந்திட ஆசை " ....செல்போன் மோகத்தை போக்கும் 90-ஸ் விளையாட்டு

Update: 2022-09-25 09:20 GMT

செல்போன் மோதத்தில் மூழ்கி கிடக்கும் இன்றைய தலைமுறையினருக்கு பழைய விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெல்லையில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு மரபு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பாளையங்கோட்டை ராமர் கோயில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கு கோலிக்காய், பம்பரம், குச்சிக் கம்பு, வண்டி உருட்டு, கூந்தவண்டி, உயரம் தாண்டுதல், பச்சைக் குதிரை, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல, சிறுமிகளுக்கு பாண்டி, நொண்டி, கிச்சு கிச்சு தாம்பூலம், கொலைக் கொலையா முந்திரிக்கா, ஓலை காத்தாடி, தட்டாமாலை 7ம் கல் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம் கோ-கோ உள்ளிட்ட 1990 காலக்கட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுகளை பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்