உடுமலை - மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை - மூணார் சாலையில், குடிநீருக்காக குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களாக கேரளா பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூட்டங்கள், தற்போது மீண்டும் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் வலம் வர தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உடுமலை - மூணார் சாலையில் அதிகளவில் யானைகள், குட்டிகளுடன் உலா வருகின்றன.
இதனிடையே, வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.