"அந்நிய மொழியை எதற்கு தேடிச் செல்ல வேண்டும்?" - முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

Update: 2022-12-05 02:41 GMT

முதலில் அனைவரும் தாய்மொழில் பேச வேண்டும் என்றும், அடுத்து சகோதர மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னையில் இசை மேதை கண்டசாலா வெங்கடேஷ்வரராவின் 100-ஆம் ஆண்டு விழா மற்றும் கலா பிரதக்ஷனி கண்டசாலா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, டிரம்ஸ் சிவமணி, தோட்டா தரணி, ரஞ்சனி ரமணி, தயாபன், வயலின் கலைஞர் அவசரலா கன்னியாகுமரி, சுதாராணி ரகுபதி ஆகியோருக்கு கலா பிரதக்ஷனி கண்டசாலா விருதை வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்தார். விழாவில் பேசிய அவர், உலக மொழிகளில் மிகவும் பழைமையான மொழியான தமிழ் மொழி இருக்க, எதற்காக வெளிநாட்டு மொழியைத் தேடிச் செல்ல வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்