இந்தியர்களின் Whatsapp நம்பர்கள் திருட்டு? - மறுப்பு தெரிவித்த வாட்ஸ் ஆப் நிறுவனம்

Update: 2022-11-29 06:45 GMT

வாட்ஸ் ஆப் செயலியில் பயனாளர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக வெளியான தகவலை, வாட்ஸ் ஆப் நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 84 நாடுகளை சேர்ந்த 50 கோடி வாட்ஸ் ஆப் பயனாளர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டுள்ளதாக, சைபர் நியூஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பயனாளர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், சைபர் நியூஸ் நிறுவனம் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் ஆதாரமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்