கடன் கொடுத்தவருக்கு நேர்ந்த நிலை - புதுச்சேரியில் நடந்த பயங்கரம்

Update: 2023-04-08 09:17 GMT

புதுச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரிடம் கண்ணன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் கண்ணன் கடனை திருப்பி தராத நிலையில், ரஞ்சித் குமார் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது தகராறு முற்றிய நிலையில், கண்ணனும் அவரது கூட்டாளி ஜார்ஜ் என்பவரும் சேர்ந்து, ரஞ்சித் குமார் தலையில் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த கண்ணன், ஜார்ஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்