பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கான புதிய சிறு சேமிப்பு திட்டம்.
மகளிர் பெயரில் தொடங்கப்படும் 2 ஆண்டு நிரந்திர வைப்புக்கு 7 புள்ளி 5 சதவீதம் வட்டி வழங்கப்பட இருக்கிறது.
மகிள சம்மான் சேமிப்பு பத்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பெண்கள் அல்லது பெண் குழந்தைகளின் பெயரில் நிரந்திர வைப்பு தொடங்க முடியும்.
அதிகபட்சம் 2 லட்சம் வரை வைப்புத்தொகை இருக்கலாம். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள்.
2 ஆண்டுகள் நிறைவு பெறுவதற்கு முன்பு பகுதியளவில் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதி உண்டு.
இதன் மூலம் குடும்ப தலைவிகள் பெயரிலும், பெண் குழந்தைகள் பெயரிலும் பணத்தை சேமிப்பு திட்டத்தில் வைப்பது அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2025 மார்ச் மாதம் வரை அதாவது 2 ஆண்டுகள் வரை இந்த சேமிப்பு திட்டத்தில் பயனடைய முடியும்
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இரண்டு லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதியுதவியில் பயனடைந்தவர்களில் 3 கோடி பேர் பெண் விவசாயிகள்.
இவர்களுக்கு மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.