அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்ட இடத்தில்பத்திரிகையாளரும், தயாரிப்பாளரும் செய்த காரியம்

Update: 2022-08-21 10:56 GMT

அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்ட இடத்தில்பத்திரிகையாளரும், தயாரிப்பாளரும் செய்த காரியம்


அமெரிக்க பத்திரிகையாளரும் ஆப்கான் திரைப்பட தயாரிப்பாளரும் தலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பத்திரிகையாளர் ஐவர் ஷீரர் மற்றும் ஆப்கானிஸ்தான் தயாரிப்பாளர் ஃபைசுல்லா ஃபைஸ்பக்ஷ் ஆகிய இருவரும் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட ஷெர்பூர் பகுதியில் கடந்த 17ம் தேதி படப்பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாதுகாவலர்கள் இருவரையும் விசாரித்து தலிபான் உளவுத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து உளவுத்துறையினர் இருவரையும் கைது செய்து அழைத்து சென்ற நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்