மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில், ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் குளிர்கால சீசன் இருக்கும். இந்நிலையில், குளிர்கால சீசனை அனுபவிக்கும் விதமாக, ஏராளமான புதுமண தம்பதிகளும், சுற்றுலாப் பயணிகளும் உதகையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அரசு தாவரவியல் பூங்காவை காண ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள், பூங்காவில் உள்ள மலர்களையும், புல்வெளிகளையும் பார்த்து, ரசித்து செல்கின்றனர். கோடை சீசனை போன்று கூட்டம் அதிகமாக இல்லாவிட்டாலும், நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல, தொட்டபெட்டா காட்சிமுனை, படகு இல்லத்தை காண ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.