"எந்த அரசியல் கட்சியுடனும் எங்களுக்கு தொடர்பு இல்லை" - ஜி ஸ்கொயர் நிறுவனம்

Update: 2023-05-03 14:37 GMT

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், வருமான வரி சோதனையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சட்ட விதிகளுக்கு உட்பட்டவை என்றும் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக செயல்பட்டு வரும் நிலையில் தங்கள் நிறுவனம் பற்றி பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, அரசியல் கட்சியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமானது அல்ல என உறுதிபட தெரிவித்துள்ள ஜிஸ்கொயர், தங்களுடைய சொத்து மதிப்பு 38 ஆயிரம் கோடி ரூபாய் என வெளியான தகவலும் தவறானது என நிரூபிப்பதற்கு இந்த சோதனை உதவியுள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வருமானவரி சோதனையின் போது 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலும் உண்மைக்கு மாறானது, அடிப்படை ஆதாரமற்றது எனவும் ஜி ஸ்கொயர் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்