நாட்டை பரபரப்பாக்கிய விருதாச்சலம் சம்பவம்... மதுரை ரயிலில் வடமாநில இளைஞர்கள்... - கடைசியாக வார்னிங் தந்த ஏடிஜிபி..!
- வடமாநில தொழிலாளரை தமிழ் பேசும் இளைஞர் தாக்கும் இந்த வீடியோ நாடு முழுவதும் வேகமாக பரவியது... நீங்க எதுக்கு இங்க வர்றீங்க, நாங்களே எல்லா வேலையும் செஞ்சிக்குவோம் என பேசியவாறு தமிழ் இளைஞர், வடமாநில தொழிலாளரை தாக்கும் காட்சிக்கு கண்டனங்கள் எழுந்தன.
- அவர்களும் மனிதர்களே, இந்திய பிரஜையே, ஏழ்மையில் வேலைதேடி வருவோரிடம் இப்படி கோரமுகம் காட்டுவது ஏன்...? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் ரயில்வே போலீஸ் கவனம் செல்ல விசாரணை தீவிரமடைந்தது.
- இளைஞரை தாக்கியது யார்...? என்ற கேள்விக்கு ரயில்வே க்ரைம் போலீஸ் விசாரணையில் விடை கிடைத்துள்ளது. வீடியோ வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பதிவானது என முதல் குளு கிடைத்துள்ளது. பொதுமக்கள் உதவியையும் கோரிய ரெயில்வே தொடர்ந்து கண்காணிப்பில் இளைஞரை நெருங்கியதுடன், அவரை விழுப்புரத்தில் கைது செய்தது.
- அவர் விழுப்புரத்தை சேர்ந்த மகிமைதாஸ் எனவும் சாதாரண கூலி தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே ஏடிஜிபி வனிதா, பொது இடங்களில் தனிப்பட்ட மொழி வாரியான அரசியல் ரீதியான கருத்துக்களை கூறக்கூடாது என எச்சரித்திருக்கிறார்.