கேரள மாநிலத்தில் ஒரே நாளில் காய்ச்சலுக்கு 8 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் முதல் கேரளாவில் டெங்கு, எலிகாய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலாலும், இருவர் எலிக் காய்ச்சலாலும், ஒருபர் H1N1- வைரஸ் பாதிப்பாலும் உயிரிழந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மூன்று பேர் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சலால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், 12 ஆயிரத்து 728 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் 4 வகையான டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு காய்ச்சலால் ஒரே மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.