"விஜயபாஸ்கர் கூவத்தூருக்கு ரூ.30.90 லட்சம் செலவழித்தார்" - வருமான வரித்துறை தகவல்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை வரிவசூல் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட கூவத்தூர் தனியார் ரிசார்ட்டுக்கு விஜயபாஸ்கர் 30 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 342 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரத்து 277 ரூபாய்க்கு முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதால் வருமான வரி பாக்கி 206 கோடியே 42 லட்சம் ரூபாயை வசூலிக்கவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை பதில் மனுவில் விளக்கமளித்துள்ளது.