விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில், நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அவ்வப்போது மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து வருகிறார். அதன்படி, பனையூரில் உள்ள அலுவலகத்தில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிய உள்ளார். இந்நிகழ்வில், அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட இருப்பதாகவும், செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நவம்பர் 20ஆம் தேதி நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.