"நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்" - திமுக பிரமுகர் மீது பரபரப்பு புகார்

Update: 2022-12-02 04:57 GMT

வேலூரில் திமுக பிரமுகர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரை சேர்ந்த காந்தி, சுப்பிரமணி என்ற இரு சகோதாரர்கள் காவல்துறை கணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அதில் இருவருக்கும் சொந்தமாக உள்ள 7.45 ஏக்கர் நிலத்தில், திமுக பிரமுகர் வெங்கடேசன் என்பவர் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதை தட்டிக் கேட்டதற்கு எங்களை தாக்கியதோடு, குடும்பத்தோடு கொன்று விடுவதாகவும் வெங்கடேசன் மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை மறுத்துள்ள வெங்கடேசன், அந்த நிலம் எங்களது பூர்விக சொத்து எனவும், அவர்களது மூதாதையர்கள் தான் எங்களை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்