வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருவலூரை அடுத்த கோட்டு மடுவு பகுதியை சேர்ந்தவர் மீசை மாதையன். வீரப்பனின் கூட்டாளியான இவர் மீது, சந்தன மர கடத்தல் வழக்கு தொடரப்பட்டு, குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மீசை மாதையன், திடீர் உடல் நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/bbDcGkmfPoc