தமிழகத்தை உலுக்கிய VAO படுகொலை - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு | Thoothukudi VAO | GovernorRNRavi

Update: 2023-05-04 06:44 GMT

வி.ஏ.ஓ படுகொலை, கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சி கலவரம் போன்றவை நடக்கும் போது, தமிழ்நாட்டை எப்படி அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியும்? என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்..

ஆங்கில நாளிதல் ஒன்று பேட்டி அளித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை ஆளுநர் உரையில் தமிழ்நாட்டை அமைதிப்பூங்கா என அழைக்க மறுத்த‌து ஏன்? என விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நாடு முழுவதும் பி.எப்.ஐ.(PFI) அமைப்பு தடை செய்யப்பட்ட போது, தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த‌தாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மீது எந்த நவடிக்கையும் எடுக்கப்பட்ட வில்லை என குற்றம்சாட்டியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,

கோவையில், கோயில் மீது கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல், கள்ளக்குறிச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் சேர்ந்து பள்ளியை சூறையாடியபோது, போலீசார் வேடிக்கை பார்த்த‌தாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்..

மேலும், திருச்சியில் திமுகவினர் கோஷ்டி மோத‌லில் பெண் போலீஸ் தாக்கப்பட்டதாகவும், பின்னர் தனது புகாரை திரும்ப பெற அந்த பெண் போலீஸ் கட்டாயப்படுத்த பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அண்மையில், மணல் மாஃபியாக்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து, வி.ஏ.ஓவை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தையும் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,

இதுபோன்ற சூழலில், தமிழ்நாட்டை எப்படி அமைதிப்பூங்கா என்று அழைக்க்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்