வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு
இரு மாநில அரசும் இணைந்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 603 நாட்கள் நடத்த கேரளா அரசு முடிவு செய்துள்ளது. வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று தமிழகம் வந்த கேரள மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்டது வைக்கம் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.