"இந்தியாவுக்கு 76.. எனக்கு 45..." பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்..!
"இந்தியாவுக்கு 76.. எனக்கு 45..." பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்..!
மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45-ஆவது பிறந்தநாளை பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மதுரைக்கும், சென்னைக்கும் இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 45 ஆண்டுகள் ஆனதை, ரயிலுக்கு கேக் வெட்டியும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டாடினார். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது தென் மாவட்ட வணிகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.