உத்தர பிரதேச மாநிலத்தில் ஃப்ரோசாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 1 குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஃபிரோசாபாத் மாவட்டத்தின் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில், லூதியானாவில் இருந்து ரேபரேலிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து முன்னால் ஓடிக்கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானது. பேருந்து சாலையில் இருந்து இறங்கி குழிக்குள் விழுந்த நிலையில், இதில் 1 குழந்தை உட்பட 6 பேர் பலியானதுடன் 22 பேர் காயம் அடைந்தனர்... விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். ஓட்டுநர் மயங்கி விழுந்ததால் விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.