சோற்றுக் கற்றாழையில் தொங்கும் உரல், உலக்கை... வியப்புடன் பார்த்துச் செல்லும் மக்கள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, சோற்று கற்றாழையில் கட்டி தொங்கவிடப்பட்ட உரல், உலக்கையை பொதுமக்கள் வழிபட்டனர். கட்டக்குளம் பகுதியில் உள்ள இக்கோயில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தொடங்கி நடைபெற்று வரும் விழாவில், உரல், உலக்கை, ஆகியவை சோற்றுக் கற்றாழையால் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, பொதுமக்கள் அவற்றை வழிபட்டு வருகின்றனர். 3 நாட்கள் இந்த விழா நடைபெறும் நிலையில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சோற்றுக்கற்றாழை உதவியுடன் உரல், உலக்கை அந்தரத்தில் தொங்குவதை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.