#BREAKING || மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்கள் - அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- "மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியது அரசின் கடமை" - பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை அரசு வழங்கிட வேண்டும்"
- இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்க வேண்டும் - நீதிமன்றம்
- "25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது"
- மாநில அரசிடம் தான் அத்தொகையை கோர வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கும் வலியுறுத்த உத்தரவு