இந்தியா வரும் உக்ரைனிய அமைச்சர்... மோடியை உக்ரைனுக்கு அழைக்க வாய்ப்பு?

Update: 2023-04-09 02:30 GMT

13 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், போர் துவங்கியதில் இருந்து முதன்முறையாக ஒரு உக்ரைன் அமைச்சர் இந்தியா வரவுள்ளார்...

உக்ரைன் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் தபரோவா திங்கட் கிழமை 4 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். உக்ரைன் விவகாரம், இருநாடுகளுக்கு இடையேயான உறவு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர் தனது கருத்துக்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவு மற்றும் கலாச்சார இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் எமின் தபரோவா சந்திக்க உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது ரஷ்யாவின் படையெடுப்பால் சேதமடைந்த உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பை சரிசெய்ய உதவிகள் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைனுக்கு அழைக்கவும் வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்