அடுத்தடுத்து தூக்கிட்டு கொண்ட சகோதரர்கள் - தாயின் தலையில் இறங்கிய இடி..! - நெல்லை அருகே அதிர்ச்சி

Update: 2022-10-09 12:20 GMT

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சகோதரர்கள் இருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த ஆயூப்கான்புரத்தை சேர்ந்த சுடலைமணி, நாராயண பெருமாள் இருவரும் தாய் செல்லத்தாய் உடன் வசித்து வந்தனர்.

சுடலைமணி டைல்ஸ் கடையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நாராயண பெருமாள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அண்ணன், தம்பி இடையே வாக்குவாதமும்

சண்டையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மனஉளைச்சலில் நாராயண பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுடலை மணியும் தூக்கிட்டு

தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த மானூர் போலீசார், இருவரது சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை

குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்