உலகம் முழுவதும் மூடப்பட்ட டிவிட்டர் அலுவலகங்கள்...வெளியேறும் ஊழியர்களால் ஆபத்து?

டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து ஏராளமான ஊழியர்கள் ராஜினாமா செய்து வருவதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள டிவிட்டர் அலுவலகங்கள் திங்கள் கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

Update: 2022-11-18 14:47 GMT

நஷ்டத்தில் இயங்கி வரும் டிவிட்டர் நிறுவனத்தை 4 ஆயிரத்து 400 கோடி டாலருக்கு வாங்கிய எலான் மஸ்க், நஷ்டத்தை குறைக்க பாதிக்கும் அதிகமான ஊழியர்களை நவம்பர் 5ல் அதிரடியாக நீக்கினார். மீதி உள்ளவர்களில், தீவிரமாகவும், அதிக நேரம் பணியாற்ற விரும்பாதவர்கள் வெளியேற கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து டிவிட்டரில் இருந்து ஏராளமான ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக வெளியேறி வருகின்றனர். ராஜினாமா செய்யும் ஊழியர்கள், எலான் மஸ்க் மீது உள்ள கோபத்தினால், டிவிட்டர் அலுவலத்தில் நாச வேலைகளில் இறங்கலாம் என்ன அச்சத்தில், உலகெங்கும் உள்ள டிவிட்டர் அலுவலகங்கள் திங்கள் கிழமை வரை

மூடப்பட்டுள்ளன. ராஜினாமா செய்துள்ள ஊழியர்கள் தங்களின் டிவிட்டர் கணக்குகளில் சல்யூட் எமோஜி குறியீடை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்