துருக்கி, சிரியாவுக்கு பறந்த 17 டன் மருத்துவ பொருட்கள்... உதவிக்கரம் நீட்டிய இந்தியா
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு இந்திய சுகாதாரத்துறை 17 டன் மருத்துவ உதவிகளை அளித்துள்ளது.
- இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகளை வழங்குவதில் இந்திய சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக கூறியுள்ளார்.
- மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சைக்கான மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகள் என 7 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் 'ஆபரேஷன் தோஸ்த்' மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.