உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட டிடிவி தினகரன் குணமடைந்து வீடு திரும்பினார்

Update: 2022-09-06 08:30 GMT

உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குணமடைந்தது வீடு திரும்பினார்.

டிடிவி தினகரனுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டது. இதனால், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது அவர் குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்