ஊட்டியில் ரயில் பாதையில் மரங்கள் விழுந்ததால், மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ஊட்டியின் லவ்டேல் கேத்தி பகுதியில் ராட்சத மரம் தண்டவாளத்தில் விழுந்தன. இதன்காரணமாக ஊட்டி - குன்னூர் இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி சென்ற மலை ரயில் குன்னூரில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரயில் கேத்தி பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதனிடையே மலை ரயில் பாதையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில், ரயில்வே ஊழியர்களும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.