இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் நகரில் வசித்து வந்த, 2 வயதான கோ-கோ என்ற லேபரடார் வகை நாய், மதுப்பழக்கத்திற்குஅடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் உரிமையாளர் இறந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானமற்றொரு நாயுடன் சேர்ந்து, விலங்குகள் நல அமைப்பினர் சிகிச்சை அளித்தனர். இதில் மற்றொரு நாய் இறந்துவிட்ட நிலையில், கோ-கோ நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாய் என்ற சிறப்பை கோகோ பெற்றுள்ளது.