திருநங்கையாக மாற முயன்ற 17 வயது சிறுவன்?.. பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்தாரா?
- சேலம் மாவட்டத்தில் திருநங்கையாக மாற முயன்றதை பெற்றோர் கண்டித்ததால், 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- எடப்பாடி அடுத்துள்ள கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் வெங்கடேஷன். இவர் சில நாட்களுக்கு முன்பு திருநங்கையாக மாற முயற்சித்ததாகவும், இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
- இதனால், மன உளைச்சலில் இருந்த சிறுவன் சில நாட்களுக்கு முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.