திருநங்கை காவலரை இழிவாக பேசி டார்ச்சர்.. ராஜினாமா முடிவுக்கு தள்ளிய எஸ்.ஐ- கோவையில் பரபரப்பு
- பாலினம் குறித்து பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறி பெண் காவல் ஆய்வாளர் மீது திருநங்கை காவலர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்திருப்பது கோவை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கோவை மாநகர காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா.
- இவர், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ராஜினாமா கடிதத்துடன் வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
- அப்போது, பேசிய அவர், காவல் ஆய்வாளர் மீனாம்பிகை தன் பாலினம் குறித்தும், சாதி குறித்தும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
- இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தனது காவல் பணியை ராஜினாமா செய்யப் போவதாக நஸ்ரியா தெரிவித்தார்.
- இதையடுத்து, நஸ்ரியாவை அழைத்து பேசிய காவல் ஆணையர், புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.