தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ5 லட்சம் பணம் அழிந்த சோகம் -எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த துயரம்
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், தங்க நகை, ரொக்கப் பணம் என 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
எடப்பாடியை அடுத்த சின்னமணலியில் எலக்டீரிசியனாக வேலை பார்க்கும் சுரேஷ் வீட்டில் மின்கசிவால்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில், வீட்டில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், தாய்க்கு மருத்துவ செலவுக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் எரிந்து சேதம் அடைந்து விட்டதாக சுரேஷ் வேதனையுடன் கூறினார். விபத்து நேரிட்ட நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.