அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் அமைந்திருக்கும் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான நிலையில், அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடக்கம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான பொறியாளர் ஐஸ்வர்யா தடிகொண்டா, தனது நண்பருடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது இந்த வன்முறை நிகழ்ந்த நிலையில், ஐஸ்வர்யா உயிரிழந்தார். அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சியில் ஐஸ்வர்யாவின் குடும்பம் ஈடுபட்டுள்ளது.