செல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிஸ்வரன் என்பவரின் மகன் கவின்குமார், அருகே உள்ள கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மாணவனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவேங்கடம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.