இன்றைய தலைப்பு செய்திகள் (21/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

Update: 2022-11-21 14:04 GMT

பொருளாதார குறியீடுகளை கொண்டதாக வளர்ச்சியை தீர்மானிக்க கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

மக்களின் வாழ்க்கை தரம், மகிழ்ச்சியை அளவீடாக கொண்டு வளர்ச்சி தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சு...

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 2-வது கூட்டத்தில் முதல்வர் உரை...

முன்னோக்கிய பாய்ச்சலில் தமிழக அரசு"

எந்தவொரு திட்டமும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

இம்மியளவு மாறாமல் மேல்நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணம் நிறைவேறி வருவதாகவும் பெருமிதம்...

"மெட்ராஸ் ஐ - தினமும் 4,500 பேர் பாதிப்பு"

மெட்ராஸ் ஐ நோயால் தமிழகம் முழுவதும் நாள்தோறும் நான்காயிரத்து 500 பேருக்கு பாதிப்பு....

குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்...

டிச.2வது வாரத்திற்கு பின் மெட்ராஸ் ஐ இருக்காது"

மெட்ராஸ் ஐ நோய் பரவக்கூடிய தொற்று நோய் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை...

டிசம்பர் 2வது வாரத்திற்குப் பின் தமிழகத்தில் மெட்ரோஸ் ஐ நோய் இருக்காது என்றும் உறுதி...

பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்"

புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டிற்கு வரும்....

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உறுதி...

Tags:    

மேலும் செய்திகள்