இன்றைய தலைப்பு செய்திகள் (21-07-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-21 16:16 GMT

மணிப்பூரில் பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வழக்கில் கைதான 4 பேருக்கு இன்று முதல் 11 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, முக்கிய குற்றவாளியின் வீட்டை அப்பகுதி பெண்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... செய்தியாளர் ராஜா வழங்கிய தகவல்கள் இவை...

2வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகள் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 2வது நாளாக நாடாளுமன்றம் இன்று முடங்கியது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் ரமேஷ்குமார்...

டயாலிசிஸ் - இளைஞர் உயிரிழப்பு

கோவையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற இளைஞர் பலி...

பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு.....

நாகையில் இருந்து இலங்கைக்கு படகு சேவை

"மீனவர் பிரச்சினை - மனிதாபிமான முறையில் தீர்வு"

"இலங்கைக்கு ஆதரவு - இந்தியாவிற்கு நன்றி"

டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் நாகைக்கும், இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையே படகு போக்குவரத்து தொடங்க இருநாட்டு தலைவர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து நாகை மக்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்.. செய்தியாளர்கள் ரமேஷ்குமார், ஸ்ரீதர் வழங்கிய தகவல்கள் இவை...

Tags:    

மேலும் செய்திகள்