இன்றைய தலைப்பு செய்திகள் (21-03-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-21 15:44 GMT

விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் இன்று அறிவிப்பு...

இயற்கை வேளாண்மையில் ஈடுபடுபவர்களை ஊக்கவிக்க நம்மாழ்வார் பெயரில் விருது...

வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்க மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம்...

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டும் விவசாயிகளுக்கு தலா 5 லட்சம் பரிசு...

நெல், கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு...

தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க செய்யும் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

கரும்பு, நெல் கொள்முதல் விலையை உயர்த்தாத‌து ஏமாற்றமளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து...

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

கரும்பு, நெல் கொள்முதல் விலையை உயர்த்தாத‌து ஏமாற்றமளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது...

மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில்...

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் இன்று படுகொலை...

பெண்ணின் தந்தை உள்ளிட்டோர் வெறிச்செயல்...

294 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டங்களை தொடங்கி வைக்க அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைப்பதாக அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்