Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-02-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-02-10 00:49 GMT

எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், அதில் தாமரை மலரும்...மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி உறுதி...

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி அரசுகளை கலைத்தது காங்கிரஸ் கட்சி என பிரதமர் மோடி குற்றச்சாட்டு...எம்.ஜி.ஆரின் ஆன்மா, காங்கிரசை மன்னிக்காது எனவும் விமர்சனம்... 

அதிமுக ஒன்றாகவும், பாஜக உடன் கூட்டணியோடும் தான் இருக்க வேண்டும்...அப்போது தான் திமுகவின் வெற்றி பிரமாண்டமாக இருக்கும் என, அமைச்சர் முத்துச்சாமி பேட்டி...

ஈரோடு இடைத் தேர்தலில் மிகப்பெரிய நிராகரிப்பை அதிமுக சந்திக்கும்...அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை...

ஈரோடு இடைத்தேர்தலில் எதிரணியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள்...அது உங்கள் பணம் என, அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சிறுமியிடம் அத்துமீறியதாக புகார்...ஆவேசமடைந்த தாய், தாக்க முயன்றதால் பரபரப்பு... 

பாஜக உடனான நல்லுறவில் விஷம் கலக்க அண்ணாமலை முயற்சி செய்கிறார்..அதிமுக ஓபிஎஸ் அணி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் 80 லட்சம் ரூபாயில் அருங்காட்சியகம்...மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி... 

ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களின் விபரம் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரிவதன் மர்மம் என்ன...? ரகசிய காப்பு உறுதிமொழி ஆளுநர் மீறி விட்டதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றச்சாட்டு...

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் விரைவில் அறிக்கை அளிக்கின்றனர்​...கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 22 சதவீதமாக உயர்த்தப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு...

தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களில் பனியின் தாக்கம்‌ குறையும்...வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தகவல்... 

30 கோடி ரூபாய்க்கும் குறைவான செலவில் உருவாக்கப்பட்ட, இஸ்ரோவின் சிறிய ரக SSLV-D2 ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது...முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் முறை வெற்றி பெற விஞ்ஞானிகள் தீவிரம்... 

நிபந்தனையற்ற வகையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுமா...? சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குகிறது....

கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த டி.எஸ்.சிவஞானம் நியமிக்கப்படுகிறார்...உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை... 

புகையிலை பொருள்களுக்கான தடை ரத்து செய்யப்பட்ட விவகாரம்...உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல்...

தகவல்களை பெற்று நமக்கு தெரியாமலேயே நமது பெயரில் வங்கிக் கடன் பெற்று மோசடி...வடமாநில கும்பலின் புது விதமான சைபர் கிரைம் அச்சுறுத்தல்...

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு, ராமநாதபுரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கப் புதையல்...2 நாள் தேடுதல் வேட்டைக்கு பின், சுமார் 18 கிலோ தங்கம், கடலுக்குள் இருந்து கிடைத்தது...

மதுரையில், முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சு... தீப்பற்றி எரிந்த மொபைல் சர்வீஸ் கடை... குண்டு வீசிய நபரை கைது செய்த போலீசார்... 

நெல்லையில், பேருந்தில் தொங்கியபடி பயணிக்கும் மாணவிகள்... கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்... 

கோபத்தை குறைக்க, பொருட்களை அடித்து நொறுக்கும் ரேஜ் ரூம் தயார்... பெங்களூருவில் உருவாக்கி உள்ளார் சென்னை ஐஐடி மாணவி... 

Tags:    

மேலும் செய்திகள்