Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-03-25 00:52 GMT

எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்..அவதூறு வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை செயலகம் நடவடிக்கை.... 

இந்தியாவின் குரலுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன் என தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு...இதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் ட்வீட்... 

காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்வது குறித்து, அவசர ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை...ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில், நாடு தழுவிய மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கப்போவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தகவல்...

ராகுல்காந்தி விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பேட்டி...சட்டத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பேச்சு... 

ராகுல்காந்தியை திட்டமிட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றியதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...எங்கள் குடும்பம் பற்றி கடுமையாக பேசிய, பிரதமர் மோடிக்கு எந்த நீதிபதியும் தண்டனை வழங்கவில்லை எனவும் ஆவேசம்...

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. பயந்திருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது என்றும் விமர்சனம்...

எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்..எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்காக, அவர்களை தகுதி நீக்கம் செய்வதா என்றும் கேள்வி... 

இன்று கர்நாடக மாநிலம் செல்கிறார், பிரதமர் மோடி...மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மற்றும் மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்...

தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா.....தமிழக சட்டத்துறை மூலம் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது...

அதிமுக ஆட்சியின் சாதனைகளை கூறும் அதிமுகவினர், ஒ.பி.எஸ்ஸை மறந்தது ஏன்...? அவர் எதுவுமே செய்யவில்லையா...?சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏவிடம் அமைச்சர் துரைமுருகன் கேள்வி...

அதிமுகவும், திமுகவும் அடித்துக்கொண்டால்தான் நாம் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும்...சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி பேச்சால் பரபரப்பு... 

விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை...தென்காசி பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு...

தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது முட்டை, தக்காளி வீச்சு...திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவினர் போராட்டம்...

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதால் வருவாய் உயர்ந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்...மற்ற மாநிலங்களை விட, வருவாயில் தமிழகம் பின்தங்கி இருப்பதாகவும் விளக்கம்...

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியம்....மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2023) | Morning Headlines | Thanthi TV

Tags:    

மேலும் செய்திகள்