- ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது...விளிம்பு நிலை மக்களும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...
- ஒரு கோடி பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை...உலகளவில் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள் விவரம் வெளியீடு...இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம், தொழில் வரி செலுத்துவோர், மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு கிடையாது என்றும் அறிவிப்பு...
- ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமைத் தொகை இல்லை...சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனங்கள் வைத்துள்ளவர்களுக்கும் கிடையாது என அறிவிப்பு...
- முதியோர், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு கிடையாது...கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என விதிவிலக்கு அறிவிப்பு...
- மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்கள் குறித்த விவரம் வெளியீடு...ரேஷன் அட்டை எண், ஆதார், தொலைபேசி, தொழில், சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும் என அறிவிப்பு...
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்...பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஒரு வார கால பயணமாக டெல்லி சென்றுள்ளதாக தகவல்...